உதகை சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

நீலகிரி: 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை சென்றடைந்தார்.

நீலகிரி: 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை சென்றடைந்தார். 

மலை மாவட்டமான நீலகிரியில் கோடை விழா களைகட்டியுள்ளது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை (18-ம் தேதி) 122-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. 5 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்காக, கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர், காரின் மூலம் மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை மார்க்கமாக வழியாக கோத்தகிரிக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர், உதகைக்கு சென்ற அவருக்கு தொட்டபெட்டா மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தமிழகம் மாளிகைக்கு சென்றடைந்தார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...