கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடிகர் எஸ்.வி.சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர். அவர் மீது பொது அமைதியை சீர்குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. தலைமறைவாக இருக்கும் அவர், சாதாரணமாக இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. ராஜேந்திரனும் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், எஸ்.வி. சேகர் மீது கைது நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் செய்தி எழுப்பினர். ஆனால், இதற்கு, பதிலளிக்க மறுத்த டி.ஜி.பி., அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியடையச் செய்தது.