கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஹாமில்டன் கிளப்-ஐ தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 60 லட்சம் மதிப்பில் ஹாமில்டன் கிளப் புனரமைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல், விடுதலை புலிகளுக்களுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் கடைசல் இயந்திரம், நகர்த்த கூடிய தீயணைப்பு இயந்திரம், ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், இந்திய அரசின் தரைப்படை, கப்பல் படை பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதன் முறையாக அமைக்கப்பட்ட இந்த காவலர் அருங்காட்சியகம் இன்று திறப்பு விழா கண்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி., கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என்று பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Video: Laxman