தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு : மக்கள் அதிருப்தி

கோவை : தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவை : தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், மே 13-ம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இல்லாமல் இருந்தது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு எரிபொருட்கள் விலையில் மாற்றம் செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டது. அதேபோல, கர்நாடகத்தில் தேர்தல் முடிந்த கையோடு விலை உயர்த்தப்பட்டது. 

மூன்று நாட்கள் 

அதாவது, 13-ம் தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆகவும் இருந்தது. ஆனால், 13-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

14-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்ந்து ரூ.77.93 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்ந்து ரூ.70.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த மூன்று நாட்களில் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை 69 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வடைந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...