கோவையில் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 



தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் திறன் பயிற்சி மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கல்வி திறனுக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவரவர் பயிற்சி பெற்ற துறைக்கேற்ப வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். 



இந்த நிலையில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த விளம்பர ஊர்தி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திறன் பயிற்சி குறித்த காணொளி மூலம் விளக்கப்படும். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது :- தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 0422-2642388 அல்லது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2642041 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும், என்றார். 

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...