தேசிய கடற்கரை கால்பந்து போட்டிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் முதன்முறையாக கடற்கரை கால்பந்து போட்டிகள் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தமிழகம், குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் தேர்வாகியுள்ளன. இதில், விளையாடும் தமிழ்நாடு அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கடற்கரை கால்பந்தாட்ட வீரர்கள் 4 பேரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் தேர்வாகியுள்ளனர். இதற்கான வீரர்கள் அறிமுகம் கூட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து, வீரர்களை உருவாக்கிய ராமன் ரகுநாத் கூறுகையில், "இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி, இந்திய கால்பந்து அணியில் பங்கேற்க செய்துள்ளேன். புட்வாலி என்றழைக்கப்படும் போட்டியில் இதுவரை மூன்று வீரர்களை சர்வதேச அளவில் பங்கேற்க செய்துள்ளேன். தற்போது, கடற்கரை கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய வைத்துள்ளேன். இது நீலகிரி மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது," அவர் தெரிவித்தார்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...