கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தலைமுடியில் பின்னல் அணிந்து வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
மகள் தலைவிரி கோலத்தில் தேர்வு எழுதுவதை விரும்பாத பெற்றோர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.
படபடப்பு
சாதாரணமாகவே தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு ஒட்டிக்கொள்வது வழக்கம். தற்போது நீட் தேர்வுக்காக, இந்த உச்சகட்ட கெடுபிடிகள் காரணமாக தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அதிகபட்ச படபடப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவையில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட அதிகபட்ச படபடப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாகவே, வெள்ளலூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற தாய் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது.