'நீட்' படபடக்கும் மாணவர்கள் : கோவையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதி

கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

தலைமுடியில் பின்னல் அணிந்து வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.

மகள் தலைவிரி கோலத்தில் தேர்வு எழுதுவதை விரும்பாத பெற்றோர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். 

படபடப்பு 

சாதாரணமாகவே தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு ஒட்டிக்கொள்வது வழக்கம். தற்போது நீட் தேர்வுக்காக,  இந்த உச்சகட்ட கெடுபிடிகள் காரணமாக தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அதிகபட்ச படபடப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கோவையில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட அதிகபட்ச படபடப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாகவே, வெள்ளலூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற தாய் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...