திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கணியாம்பூண்டியில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (32) என்பவர் சிவன்மலை என்ற பெயரில் கிளீனிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், அனுபவத்தின் மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்கி வருவதாக அந்தப் பகுதியினர், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளையில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், ஆனந்த் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இணை இயக்குநர் மருத்துவர் சுந்தர்ராஜன் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் கணியாம்பூண்டியில் ஆனந்த் நடத்தி வந்த கிளீனிக்கை ஆய்வு செய்து சோதனை நடத்தினர். அப்போது, அவருடைய சான்றிதழ்களை சரிபார்த்த போது, அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்