நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் காவிரி தீர்ப்பு குறித்து அவர் பேட்டியளிக்கையில், "தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் கூட, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மிரட்டி தீர்ப்பை வழங்கச் செய்கின்றனர்.
நீதிமன்ற தீர்ப்புப்படி தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றம் 356 பிரிவின் சட்டத்தின்படி, உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்றாவிட்டால், கடமை செய்யத் தவறியதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடர வேண்டும்.
அத்துடன் மத்திய அரசு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இது தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றார்.