நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வனப்பகுதியில் பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது.
அதேவேளையில், கோடை காலத்தில் பொலிவாகக் காணப்படும், 'கொன்றை, மே பிளவர், ஜெகரண்டா' மலர்கள் பல இடங்களிலும் பூத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சாலையின் இருபுறங்களிலும், சிப்பாய்கள் நின்று ராஜாக்களை வரவேற்பது போன்று, இந்த மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்களில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரம்மியத்தை ரசித்து பயணிக்கலாம்,'' என்றனர்.