நீலகிரிக்கு வயது 200: ஆடல் பாடலுடன் கொண்டாடிய பழங்குடியின மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் 200-வது வயதைத் தொடுவதையொட்டி அம்மாவட்ட பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் 200-வது வயதைத் தொடுவதையொட்டி அம்மாவட்ட பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.



ஜான் சல்லிவன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம். மலைகளின் அரசியான நீலகிரி இன்று உலகம் போற்றும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு மாவட்டம் புகழ் பெறக்கூடிய இடமாக உருவாகும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாவட்டம் முழுவதும் காடுகளும், மலைகளும் தான் காணப்பட்டது.



ஜான் சல்லிவன் அவர்களின் முயற்சியால் நீலகிரி மாவட்டம் உயிர் பெற்றது. இந்த கால நிலைக்கு ஏற்றவாறு தேயிலை செடிகள், உருளைக் கிழங்கு, போன்ற விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.



இப்படி படிப்படியாக உருவான நீலகிரி மாவட்டம் காலப்போக்கில் இங்குள்ள பழங்குடியின மக்களால் மேலும் புகழ் பெறத் தொடங்கியது.கலாச்சாரமும், பண்பும் நிறைந்த இம்மாவட்டம் 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது அனைத்துத் தரப்பு மலை மாவட்ட மக்களின் பெருமை.

உலக வரைபடத்தில் சுற்றுலா நகரங்களில் மலையரசியும் இடம் பிடித்திருப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில், 200-வது ஆண்டின் சிறப்புமிக்க விழாவை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நகரின் வீதிகளின் வழியே ஊர்வலமாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடனும், பாடலுடனும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.



இனி வரும் காலங்களில் மலை மாவட்டமான நீலகிரி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தனக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் எவ்வித ஐயமுமில்லை.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...