கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயிலை இயக்கக் கோரியும், கோவையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்கவே அகலப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்பட்டும், ரயில்களை அதிக அளவு இயக்கப்படுவதில்லை. ரயில்வே துறையால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.