அ.தி.மு.க அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை: கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளில் துணை ராணுவ படையினர் வந்துள்ளது பயிற்சிக்காக மட்டுமே தவிற வேறு எதுவும் இல்லை. டி.டி.வி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரது இரண்டு கட்சிகளும் நிலைக்காது. விரைவில் காணாமல் போய்விடுவார்கள். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தெலுங்கானா முதல்வரும் எந்த நிலையில் பேசினார்கள் என்று தெரியாது. தற்போது தான் அதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன்.

அ.தி.மு.க.

பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தின் போது வழங்கப்பட்டு வரும் நிதி எப்போதும் நிறுத்தப்படாது. அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.

கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் வழக்கம் போல் சின்னம் கிடைத்துவிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...