திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மே 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவு அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்திய நிலையில், மீண்டும் 2 வாரகாலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் கடனையும் கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை வைத்ததுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்காவிட்டால் மக்கள் மன்றத்திலே கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவோம். மே 3-ம் தேதி திருச்சியில் கூடவுள்ளோம். அன்றைய தினம் மத்திய அரசு வரைவு திட்டம் தாக்கல் செய்யவில்லை எனில், போராட்டம் அறிவிக்கப்படும்," என்றார்.