கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (2016-2017) மூலம் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை போன்ற துறையில் காலியான இடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுகள் முடிந்து, உடற்தகுதி தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் சிறைத்துறை காவலர் பணிக்கு 1015 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கோவை, திருச்சி, சேலம் மற்றும் வேலூர் போன்ற மையங்களில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், கோவை மத்திய சிறைத்துறை வளாகத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் 184 காவலர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் சட்டங்கள், உடற்பயிற்சிகள், தற்காப்பு கலைகள் போன்ற பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல, சிறையின் பயிற்சி பள்ளியில் தீயணைப்பு பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, யோகா போன்ற பல பயிற்சிகளும் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.