கோவையில் அதிகாரிகள் சோதனை : 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காந்திபுரம், உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 48 கிலோ அடியுள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பழ மார்க்கெட்







இதே போல், உக்கடம் பழ மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உபயோகிக்க முடியாத நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த 2.5 டன் ஆரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவையில் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...