கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது ஆகிய இரண்டு தீர்ப்புகளும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த இரண்டு தீர்ப்புகளும் தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி ஆகும்.
18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். எம்.எல்.ஏ.,க்களாக தொடரலாம் என்றாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்ற உத்தரவு வருமென நம்புகிறேன். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. ஆனால், 3 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி தொடரும். அதன்பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.