நாராயன், நாராயன் : சர்ச்சையில் சிக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது.

பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. 

ராஜஸ்தான், குஜராத் என உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர் பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கை கையாளும் நபர் தவறாக அந்த வீடியோ பதிவை பகிர்ந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டாலும், ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. கிரிக்கெட் நிர்வாக குழு டுவீட் நீக்கப்பட்டிருந்தாலும், டுவீட் ஸ்கிரீன் ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...