திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

அனுப்பர்பாளையத்தில் வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சந்தையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளை அமைத்து வருகின்றனர். அவ்வாறு, கடை அமைப்பவர்கள் சுங்கத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டுவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அவ்வாறு வசூலிக்காமல், கடைக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை வசூலித்து வருவதோடு, பணம் செலுத்த முடியாதவர்களிடம் அடியாட்களைக் கொண்டு மிரட்டி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, இப்பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகனை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து, சுங்கம் வசூலிப்பதை முறைப்படுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.