நிர்மலா தேவி விவகாரம் : மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சம்மன்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் பேசத் தூண்டிய பேராசிரியர் முருகன் என்பவரையும் போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. 

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் தங்கியிருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் ஜெனிதா தங்கியிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...