கர்நாடக தேர்தலுக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் : அய்யாக்கண்ணு நம்பிக்கை

கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.


கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 

விவசாயிகளுக்கு இலாபகரமான விலை, தண்ணீர் கொடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக உருவாக்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். மேலும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு உள்ளது. 



கர்நாடகா தேர்தல் முடிந்ததும், பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் தனக்கு உள்ளது, என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...