கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு துறைகளில் பழமையான துறையாகக் கருதப்படும் நிலஅளவை பதிவேடு துறை கடந்த 1858-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தாண்டோடு, இத்துறை 160 ஆண்டுகளை கடந்துள்ளதை குறிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வருவாய் அலுவலர் ரவிசந்தரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

நிலஅளவை துறையின் பிதாமகன் என போற்றப்படும் வில்லியம் லாம்டன், 1802-ம் ஆண்டு சென்னையில் புனித தோமையர் மலையில் நில அளவையைத் துவங்கிய நாளான ஏப்ரல் 10-ம் நாள் தேசிய நில அளவை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் புகைபடங்கள் தற்போது உபயோகப்படுத்தும் முறை உள்ளிட்ட படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய சென்னை மாகாணத்தை உள்ளடக்கி இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாகக் கொண்டு 1858-ம் ஆண்டு 18 நில அளவர்கள், 20 வரைவாளர்கள், 30 நிலஅளவை உதவியாளர்கள், 50 எழுத்தாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட நில அளவைத் துறை 160 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நில அளவைத் துறையின் ஆவணங்களை, தற்போது இணையதளம் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.