தார் சாலை போல் இருக்கும் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் ஓடுதளம் : பி.டி. உஷா குற்றச்சாட்டு

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், தார் சாலைகள் போல் இருப்பதாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குற்றம்சாட்டியுள்ளார்


கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், தார் சாலைகள் போல் இருப்பதாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகளை கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தி வருகிறது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

இதில், கேரள அணி சார்பாக பங்கேற்கும் ஒரு அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் தடகள வீராங்கனையும், இந்தியாவின் தங்க மங்கை  என அழைக்கப்படும் பி.டி. உஷா நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், 10 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது. அது தற்போது தார்சாலை போல் உள்ளது. ஓரிரு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது பிரச்சனை எதுவும் இல்லை. கூடுதல் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும், தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குப் போட்டிகளுக்கு முன்பாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கான போதிய வசதிகள் இல்லை," என அவர் குற்றம்சாட்டினார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...