கோவை : தி.மு.க. தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி கோவை மற்றும் நீலகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : தி.மு.க. தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி கோவை மற்றும் நீலகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளையும், மகள் கனிமொழியையும் இழிவுபடுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சமூக வலைதளத்தில் ஒரு டிவீட் பதிவு செய்துள்ளார்.
இதற்கு தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேரை கைது செய்தனர்.

இதே போல் நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க-வினர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து கண்டனங்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.