கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்கள் பிடிபடுவார்கள் - மாநகர காவல்துறை

கோவை: கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்களை அதி நவீன தொழில்நுட்ப குழுவினர் மூலம் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் பா.ஜ.க நிர்வாகிகளின் கார்களுக்கு தீ வைத்தவர்களை அதி நவீன தொழில்நுட்ப குழுவினர் மூலம் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பா.ஜ.க-வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் செல்வபுரம் உமாபதி ஆகியோரது வீடுகளில் நின்ற கார்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இந்த வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், "இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை கண்காணித்துள்ளோம். அதில் காட்சிகள் தெளிவாக தெரியாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்." என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...