ஈரோடு-கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும்

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- 

விஜயமங்கலம் மற்றும் ஊத்துக்குளி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு முதல் கோவை வரையான பாதையை உபயோகிக்கும் சில ரயில்கள் தாமதமாக வந்தடையும். சில ரயில்கள் ரத்து செய்யப்படும். 

சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்றும், 25-ம் தேதியும் ரத்து செய்யப்படும். அதோடு, வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

இதே போல் திருச்சி- பாலக்காடு, பிலாஸ்பூர்-திருநெல்வேலி, பிலாஸ்பூர்-எர்ணாகுளம், ஜெய்பூர்-கோவை ஆகிய ரயில்களின் நேரங்களிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...