தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சினிமா தயாரிப்பில் விதிக்கப்படும் உள்ளடக்கக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட விநயோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கெடுக்கப் போவதில்லை என திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்பொழுது :- தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி குறித்த பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அழிந்து வரும் சினிமா தொழிலில் அடிக்கடி வேலைநிறுத்தம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்த போராட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.