தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டத்திற்கு ஆதரவில்லை : திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 



டிஜிட்டல் சினிமா தயாரிப்பில் விதிக்கப்படும் உள்ளடக்கக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட விநயோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கெடுக்கப் போவதில்லை என திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர்  கூறும்பொழுது :- தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி குறித்த பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அழிந்து வரும் சினிமா தொழிலில் அடிக்கடி வேலைநிறுத்தம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்த போராட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...