மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.
கோவை: மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.
மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சிரியாவில் நிகழும் வன்முறை துரதிஷ்டவசமானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வருத்தமளிக்கின்றது. இந்தியா - மொரிசியஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது. மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகக் கற்கின்றனர்.
அவர்கள் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கையினை மொரிசீயஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல், சிவராத்திரி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம்." என்றார்.