நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். துபாய் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பரிசோதனையின் முடிவில் ஸ்ரீ தேவி உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், துபாய் மீடியா நிறுவனம் ஸ்ரீ தேவி மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாவது :-

பிரத பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு ஸ்ரீ தேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக வழக்கமான முறையில் தான் விசாரணை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவின் படி அவர் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.