திருப்பூரில் கூட்டுறவு அங்காடியில் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்: திருப்பூரில் கூட்டுறவு அங்காடியில் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதாக நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள 59/1 என்ற கூட்டுறவு அங்காடியில் தரம் குறித்து மண்டல மேலாளர் முருகேசன் ஆய்வு செய்தார்.
மேலும் கூட்டுறவு அங்காடிக்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், சரியான அளவுகளில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்றும், ரேஷன் கார்டுகளில் பதியப்பட்ட பெயர்களில் உள்ளவர்கள் பொருட்களை வாங்குகிறீர்களா? என்றும் சோதனை மேற்கொண்டார்.
இதே போல அனைத்து கூட்டுறவு அங்காடிகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.