நிலத்தடி நீரை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் சிறுதுளி அமைப்பு

தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

கோவை : தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது. 



இந்தியாவில் பல்வேறு இடங்களில் போதிய அளவு மழை பெய்துள்ள நிலையிலும், இப்போதும் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நிலத்தடி நீரையே விவசாயிகளும், பொதுமக்களும் நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர் குறைபாடுக்கு மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. அதேவேளையில், சாலைகள் மற்றும் திறந்த வெளிப்பகுதிகளில் விழும் மழைநீர் பாதாள சாக்கடையில் கலந்து மாசடைவதுடன், பிற பகுதிகளுக்கும் பரவி சீர்கேட்டை உருவாக்குகின்றது. எனவே, நிலத்தடி நீரை சீரமைக்கும் முயற்சியாக, கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சேகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 



கோவையில் பாறைகள் நிறைந்த பகுதிகளில் போர்வேல் மூலம் மழைநீர் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாநகராட்சி, சிஜிடபூள்யூ, கோவை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மழைகாலங்களில் நிலத்தடி நீர் சேகரிக்கப்படுகிறது. சிறுதுளி அமைப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...