ஆசிரியர் திட்டியதால் குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த மாணவிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையிலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் 5 பேரை ஆசிரியர் நேற்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த ஐந்து பேரும் கடையில் எலி மருந்தை வாங்கி, வகுப்பறையிலேயே வைத்து குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விடவே அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த ஐந்து பேரையும் பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அந்த ஐந்து மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.



அப்போது அங்கிருந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...