நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி பாதுகாப்பு பேரவை அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில், திமுக, தி.க, த.பெ.தி.க, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.