'பாரதியார் பல்கலைக்கழக லஞ்ச விவகாரம் கடந்தாண்டே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது'

பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலிப்பணியிடமாக இருக்கும் துணைவேந்தர் பணியிடத்திற்கு உயர்கல்வி துறை செயலாளர் மூலம் குழு அமைக்கப்பட்டு எவ்வித குறைகளுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக அரசு கண்காணித்து வருகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடந்திருக்கிறது என்பது தவறான தகவலாகும். பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற ஊழல்கள் நடந்திருப்பதாகப் புகார் வந்ததாலேயே, அதனை ஆய்வு செய்ய முன்கூட்டியே குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. 

உயர்கல்வி துறையை பொருத்தவரை மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுடன், இந்திய அளவில் 25.2 என உள்ளது. தமிழகத்தில் 46.9 சதவீதமாக மாணவர்களின் சேர்க்கை மாறியுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...