பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - தா.பாண்டியன்

காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை : காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர மேற்கு மண்டல மாநாடு, கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்து 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  

மார்ச் இறுதியில் மாநில மாநாடும், ஏப்ரலில் அகில இந்திய மாநாடும் நடத்த உள்ளோம். அதில் அரசியல் தீர்மானங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறைகூற விரும்பவில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாகவே 3 மாதங்களில் காவிரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டதை நிறைவேற்ற இந்த அரசு தவறிவிட்டது. இந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றுமா? என்று தெரியவில்லை. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,மேல் முறையீடு செய்வேன் என கர்நாடக  முதல்வர் கூறி உள்ள நிலையில், மேல் முறையிடு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற கூறியது வெறும் கருத்துரையா அல்லது கண்டிப்பான தீர்ப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் நதி நீர் பங்கீட்டை கணினி மூலமாக  தீர்மானிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மாநிலத்திற்கு ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணிக்கு மட்டும் ஒருவர் நியமித்தால் போதுமனது 

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்காவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...