சாலைகளை சீரமைக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., கைது

கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி பகுதியில் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக சாலைகள் பழுதடைந்துள்ளது. வாகனங்களிலும், நடந்தும் செல்லமுடியாத அளவிற்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகளை செப்பனிட்டு புதிய தார் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களிடமும் பலமுறை நேரிலும் , கடிதம் மூலமாகவும் எடுத்துச் சொல்லியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் , உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார். 

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...