மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.
திருப்பூர்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

மங்களம் சாலையில் உள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மனு வாங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள்நல ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனு பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துணைத்தலைவர் முருகன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்து வழங்கியுள்ள நலத்திட்டங்கள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் ஆணையம் கண்காணித்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இறந்தவர்களில் இரண்டுபேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.