முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீலகிரி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் அனைவரும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, 5 பேர் மட்டுமே ஆஜராயிருந்தது குறிப்பிடத்தக்கது.