குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குனியமுத்தூர் கஸ்தூரி காடர்ன் பகுதியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (37). இன்று அதிகாலை இவர் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் திடீரென அரை நிர்வாணத்தில் புகுந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும், அப்துல்லாவின் மனைவி அணிந்திருந்த நகை, பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் அருகே உள்ள பாஷா (46) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் அவரது சகோதரி அணிந்திருந்த 2 சவரன் நகையையும் மிரட்டிப் பறித்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக, தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே பகுதியில் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.