மேட்டுப்பாளையத்தில் பயணி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் பயணி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார் மற்றும் நடத்துநர் சேக்பரீத் மீது பயணி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த புகார் மேட்டுப்பாளையம் வட்டாரா போக்குவரத்து அலுவலரிடமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நடத்துநர் சேக்பரீத் மீது கொடுக்கப்பட்ட புகார் உண்மை என உறுதி செய்தார்.
இதனிடையே மோட்டார் வாகன சட்டம்( 34) பிரிவு 1- ன் படி நடந்துநர் சேக்பரீதின் நடந்துநர் உரிமம் தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்க்கு (12-2-2018)முதல் (13-3-2018) வரை ரத்து செய்யப்படுவதாக வட்டாரா போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (3.2.2018 ) மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் எம். ஜெயக்குமார் (SB_டிரான்ஸ்போர்ட் TN 66 F 5271) பயணம் செய்தபோது டிக்கெட் வாங்கியது போக மீத தொகை 25 ரூபாயை மூன்று முறை கேட்டும் தராமல் இழுத்தடித்ததோடு, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் சென்றடையும் வரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.