ரேஷன் கடையிலேயே பிளாஸ்டிக் அரிசி..! : அலறும் மக்கள்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

திருப்பூர் 48-வது வார்டு சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் தனது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். 



மாற்றுத்திறனாளியான ராஜா அதேபகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பணிசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ரூ.1,220 மதிப்புள்ள  25 கிலோ பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை இரண்டு வாங்கியுள்ளனர்.



இதனிடையே நியாய விலைக் கடையில் வாங்கிய அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் போட்டு வேக வைத்த போது கால்பங்கு அரிசியானது தண்ணீரில் மிதந்துள்ளது. இருப்பினும் அரிசியை வேக வைத்து பார்த்த போது பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, அரிசியை உருண்டை செய்து , தீயில் காட்டியுள்ளார். அப்போது அரிசி உருண்டை தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அதே போல் அரிசியை உருட்டி சுவற்றில் அடித்த போது உடையாமல் கல் போல் இருந்ததைக் கண்ட ஜெயமேரி இது குறித்து நியாய விலை கடையில் பணியாற்றும் ஊழியரிடம்  கேட்டுள்ளார், அதற்கு, "இது தரமான அரிசி என்றும், வாங்கிச் சென்ற அரிசியை மாற்ற முடியாது" என்றும் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். 



இது தொடர்பான புகாரின் பேரில் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி முருகேஷ் இன்று அந்த நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்தியுள்ளார். 

நியாய விலைக் கடைகளிலேயே பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...