சீரமைக்கப்படாத சாலையால் சிரமப்படும் மக்கள்

உதகையில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலைகளால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி: தொட்டபெட்டா பஞ்சாயத்து மற்றும் உதகை நகராட்சி ஆகிய இரண்டு நிர்வாகதிற்குட்ப்பட்டது குளிச்சோலை கிராமம். இப்பகுதியில் கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், முட்டை கோஸ் ஆகியவற்றை விவசாயம் செய்வது விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது. 

உதகையிலிருந்து பிங்கர் போஸ்ட் வழியாகவும், புதுமந்து வழியாகவும் இந்த கிராமத்தை அடைவதற்கான வழிதடங்கள் உள்ளன. ஆனால், குளிச்சோலை பிரிவிலிருந்து பிங்கர் போஸ்ட் சாலையையே அப்பகுதி மக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரதான சாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் இந்த கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசய பொருட்களை வாங்க வேண்டுமானால் உதகை நகருக்கு தான் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது வயதானவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் நலக் குறைவால் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

அபாயம்

சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவற்றை தவிர்க்க வாகனங்களை சாலையின் ஓரங்களில் இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை காலங்களில் மழை நீர் தேங்கியும், சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும், வெயில் காலங்களில் புழுதிகள் பரப்பதாலும் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



குறிப்பாக சீசன் காலங்கள் மற்றும் அவசர கால நேரங்களில் இந்த கிராம சாலை வழியாக உல்லத்தி, காரபிள்ளு, கவரட்டி, தாவனே, கடனாடு, தேனாடு கம்பை, பெந்தட்டி, சின்னகுன்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் சாலையாகவும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

விடுமுறை நாட்களின் போது உதகை நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்போது கூடலூர் மார்க்கமாக வரும் வாகங்கள் இந்த சாலையை பயன்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 



இதேபோல் கூடலூரில் இருந்து முதுமலை, கல்லட்டி வழியாக வந்தால் உதகை நகரை தொடாமல் கோத்தகிரி வழியாக சமவெளி பிரதேசங்களுக்கும் செல்ல கூடிய இந்த சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலை பெரும் சவாலாக உள்ளது." என்றனர்.

எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கிராம சாலை நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் கீழ் இயங்குவதால் இரண்டு நிர்வாகங்களும் அலட்சியப் போக்கு காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...