ஊருக்குள் புகுந்த காட்டெருமை: விரட்டும் பணியில் வனத்துறை

அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இவற்றில் நாள் தோறும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அன்னூர் அருகே உள்ள  வரதயாம்பாளையத்தில் என்ற கிராமத்தில் காட்டெருமை ஒன்று புகுந்தது. 

இதனைப் பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்துள்ள காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



ஆனால், அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் செல்லாமல் கிராம பகுதியில் சுற்றி வருகிறது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மலையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள கிராமத்திற்கும் காட்டெருமை புகுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுக்குள் உணவு இல்லாததால் காட்டெருமை ஊருக்குள் வந்திருக்கலாம். வன விலங்குகள் காட்டில் இருந்து வெளி வராமல் இருக்கும் வகையில் வன எல்லையிலேயே தேவையான உணவு, தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...