ட்ரெண்டிங்கில் உள்ள நடிகை மீது போலீஸில் புகார்

கண்களின் வித்தையால் பிரபலமான மலையாள நடிகை பிரியா வாரியர் மீது ஐதராபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கண்களின் வித்தையால் பிரபலமான மலையாள நடிகை பிரியா வாரியர் மீது ஐதராபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால், அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களை பெற்றது. கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். தற்போது, கூகுள் தேடலில் பிரபலமாகி உள்ள பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து அதிகம் தேடப்பட்டவர் பிரியா வாரியர்தான்.

இந்நிலையில், பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஐதராபாத்தின் பலுக்நுமா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய்ய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது. இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும், இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களின் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...