கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு சொக்கம் புதூர் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை: சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கோவை சொக்கம்புதூர் பகுதியில் மயான பூசை நடத்தப்பட்டது.
கோவை சொக்கம்புதூர் பகுதியில் மயானம் ஒன்று உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு அந்த மயானத்தில் நேற்று நள்ளிரவு மயானக் கொள்ளை என்றழைக்கப்படும் மயான பூசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேள தாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது.
கையில் பயங்கர ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மாசாணியம்மனின் களி மண் உருவத்தைச் சுற்றி நடனமாடியபடி பூசை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கைபிடி மண்ணை எடுத்து அதில் இருந்து மனித எலும்புகளை வாயில் கடித்தபடி பூசாரி மயானக் கொள்ளையில் ஈடுபட்டார்.
"மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூர் மாசாணியம்மன் கோவிலில் வைத்து பூசை செய்வது வழக்கம். இது சக்தி வாய்ந்த தெய்வம், இந்த கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும்" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.