திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இன்று காலை கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொளையடித்துச் சென்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இன்று காலை கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொளையடித்துச் சென்றனர்.
கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணியம்மாள். இந்த மூதாட்டி தனது மகன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் அனைவரும் வேலைக்கு சென்று விட வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக, போலீசாரிடம் புககர் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகிலிருந்த நிறுவனங்களில் போருத்தபட்டிருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.