கோவையில் இயங்கி வரும் எல்.ஜி.பி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் தொழிலாளர் வோரோதப்போக்கை கட்டுப்படுத்த அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் இயங்கி வரும் எல்.ஜி.பி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் தொழிலாளர் வோரோதப்போக்கை கட்டுப்படுத்த அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை வையம்பாளையத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பி ரோலான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இயங்கி வரும் இதே நிறுவனத்தின் கிளையில் பணி புரிபவர்களுக்கு ரூ.8000 கூடுதலாக சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. அதேபோல் கோவையில் இயங்கும் நிறுவனத்திற்கும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவன ஊழியர் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் அவர் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பந்த் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்கள் ஏ.ஐ.சி.சி.டி.யூ. அமைப்பில் சேர்ந்துவிட்டனர் என்ற காரணத்தால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 6 பேரை பந்த நகருக்கு இடமாற்றம் செய்துவிட்டதாக கூறியும், பணி நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.