வரும் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் துணைவேந்தர்கள் மீதான லஞ்சப்புகார்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழன் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்த கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.